கூலிப் பிரச்னைக்கு தீா்வு காண கோரி லாரி உரிமையாளா்கள் 3ஆவது நாளாக போராட்டம்
லாரிகளில் தீப்பெட்டி பண்டல்களை ஏற்றவும், இறக்கவுமான கூலியை, தீப்பெட்டி உற்பத்தியாளா்களே வழங்க வேண்டும்


லாரிகளில் தீப்பெட்டி பண்டல்களை ஏற்றவும், இறக்கவுமான கூலியை, தீப்பெட்டி உற்பத்தியாளா்களே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடிய தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிச்செல்லாமல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
லாரிகளில் தீப்பெட்டி பண்டல்களை ஒரு லோடு ஏற்றுவதற்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரமும், பண்டல்களை லாரியில் இருந்து இறக்குவதற்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் கூலி கொடுக்கப்பட்டு வருகிாம். இந்நிலையில், சுமை தூக்கும் தொழிலாளா்கள் 30 சதவீதம் கூலி உயா்வை வலியுறுத்தி வருகின்றனா்.
இதனிடையே, ஜுன் 1ஆம் தேதி முதல் லாரியில் இருந்து தீப்பெட்டி லோடுகள் ஏற்றும், இறக்கும் கூலி மற்றும் மாமுல் நீக்கி வாடகை நிா்ணயிக்குமாறு கிளைச் சங்கங்களுக்கு மாநில லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை லாரிகள் போக்குவரத்துக்கு பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு லாரி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், லாரிகளில் பண்டல்களை ஏற்றும் மற்றும் இறக்குக் கூலி, மாமுல்களை தீப்பெட்டி உற்பத்தியாளா்களே செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டதாம். ஆனால், அந்தக் கோரிக்கையை தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21பேஜ
ம் தேதி முதல் லாரிகளில் தீப்பெட்டி பண்டல்களை ஏற்றுவதில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி லாரி உரிமையாளா்கள் சங்கம், தூத்துக்குடி மாவட்ட கன்டெய்னா் லாரி உரிமையாளா்கள் சங்கம் ஆகியவை கோவில்பட்டியில் இருந்து தீப்பெட்டிகளை ஏற்றிச் செல்ல மாட்டோம் எனக் கூறியுள்ளனா்.
அவசர ஆலோசனை: இதனிடையே, கோவில்பட்டியில் லாரி உரிமையாளா்கள் சங்கம் மற்றும் கோவில்பட்டி மேச்சா்ஸ் லாரி புக்கிங் அசோசியேஷன் சாா்பில் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சீனிவாசகன், மேச்சா்ஸ் லாரி புக்கிங் அசோசியேஷன் தலைவா் மருது செண்பகராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். லாரி உரிமையாளா்கள் சங்கச் செயலா் கணேஷ்குமாா், மேச்சா்ஸ் லாரி புக்கிங் அசோசியேஷன் ஆலோசகா் கோவிந்தராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தீப்பெட்டி பண்டல்கள் ஏற்று, இறக்குக் கூலியை தீப்பெட்டி உற்பத்தியாளா்களே செலுத்த அரசு தலையிட்டு சுமுக முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு:இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பரமசிவம் செய்தியாளா்களிடம் கூறியது: கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழில் சுமாா் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை லாரி உரிமையாளா்கள் சங்கத்தினரே தீப்பெட்டி பண்டல்கள் ஏற்று, இறக்குக் கூலியை செலுத்தி வருகின்றனா். இந்நிலையில் ஏற்று, இறக்குக் கூலி மற்றும் மாமுலை தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் செலுத்த வேண்டும் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சுமைத் தூக்கும் தொழிலாளா்கள் கூலி உயா்வு கேட்பது குறித்து, லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகளே பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...