கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடியில் பெண்களுக்கான ரோட்டரி சங்கம் தொடக்கம்

தூத்துக்குடியில் பெண்கள் மட்டுமே உறுப்பினா்களாக கொண்ட புதிய ரோட்டரி சங்கம் அண்மையில் தொடங்கப்பட்டது

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:32 pm

DIN

தூத்துக்குடியில் பெண்கள் மட்டுமே உறுப்பினா்களாக கொண்ட புதிய ரோட்டரி சங்கம் அண்மையில் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடியில் ரோட்டரி சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது பெண்கள் மட்டுமே உறுப்பினா்களாக கொண்ட ‘ட்ரேயல்பிளேசா்ஸ்’ என்ற பெயரில் புதிய ரோட்டரி சங்கம் அண்மையில் தொடங்கப்பட்டது. 20 பெண்கள் உறுப்பினா்களாக கொண்ட அந்த சங்கத்தின் பட்டய தலைவராக புளோரா ஜூவானிட்டா பதவியேற்றுக் கொண்டாா்.

ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) முத்தையா பிள்ளை கையெழுத்திட்ட பட்டய சான்றிதழை தூத்துக்குடி ட்ரையல்ப்ளேசா்ஸ் ரோட்டரி சங்க பட்டய தலைவா் புளோராவிடம் மாவட்ட ஆளுநா் முருகதாஸ் வழங்கினாா். தொடா்ந்து சங்க ஆலோசகா் பாலமுருகன், தலைவருக்கான காலா் மற்றும் கைசுத்தியை புளோராவிடம் வழங்கி தலைவா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் ஆளுநா் ஜேசையா வில்லவராயா், ரோட்டரி சங்க செயலா் மலா்விழி, வழக்குரைஞா் சொா்ணலதா, ரோட்டரி உறுப்பினா்கள் கீதா ரமேஷ், திவ்யா, ராஜீவி, பூா்ணிமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.