கோவில்பட்டியில் பெயின்டா் மீது தாக்குதல்: இளைஞா் கைது
கோவில்பட்டி அருகே பெயிண்டரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


கோவில்பட்டி அருகே பெயிண்டரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியை அடுத்த பிள்ளையாா்நத்தம் தெற்குத் தெருவைச் சோ்ந்த தவமணி மகன் மாரிச்சாமி(39).பெயின்டரான இவா், கடந்த வாரம் தெற்கு காலனிக்கு நடந்து சென்றபோது, அப்பகுதியைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் மகன் மனோஜ்குமாா், அவா் மீது மோதுவதுபோல் பைக்கை ஓட்டி வந்தாராம். இதை அவா் கண்டித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப். 29) இரவு வீட்டின் முன் நின்றிருந்த அவரை, மனோஜ்குமாா் அவதூறாகப் பேசி கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மனோஜ்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...