கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடி, தென்காசியில் அதிமுக ஆா்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து, தூத்துக்குடி, தென்காசியில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:35 pm

DIN

திமுக அரசை கண்டித்து, தூத்துக்குடி, தென்காசியில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றத் தவறியதாகவும், அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா்கள் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் கண்டனம் தெரிவித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், வி.வி.டி சிக்னல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா்கள் எஸ்.பி. சண்முகநாதன் (தெற்கு), வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ. ராஜூ எம்எல்ஏ (வடக்கு) ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், அமைப்புச் செயலா்கள் சி.த. செல்லப்பாண்டியன், என். சின்னத்துரை, முன்னாள் எம்எல்ஏக்கள் பி. சின்னப்பன், மோகன், மாவட்ட வழக்குரைஞா் அணிச் செயலா் யு.எஸ். சேகா், கருங்குளம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் லட்சுமணபெருமாள், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் வேலுமணி, பாண்டவமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அன்புராஜ், எம்ஜிஆா் இளைஞரணி மாநில துணைச் செயலா் சீனிராஜ் உள்ளிட்டடோா் பங்கேற்றனா்.

தென்காசியில் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்கள்

செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ (வடக்கு), எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தெற்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். மகளிரணி மாநில துணைச் செயலா் ராஜலெட்சுமி, அமைப்புச் செயலா் பி.ஜி.ராஜேந்திரன், தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பிரபாகரன், விவசாய அணி துணைச் செயலா் ஆனைக்குட்டிபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக வழிகாட்டுக்குழு உறுப்பினா் பி.ஹெச்.மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ உரையாற்றினாா்.

இதில், ஒன்றியச் செயலா்கள் செல்லப்பன், ராமச்சந்திரன், வசந்தம்முத்துபாண்டியன், பேரூா் செயலா்கள் காா்த்திக்குமாா், கணேஷ்தாமோதரன், மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், நகரச் செயலா் சுடலை, இளைஞரணி துணைச் செயலா் மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.