விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிலம்பம், ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு இடையிலான சிலம்பம், ஸ்கேட்டிங் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:46 pm

DIN

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு இடையிலான சிலம்பம், ஸ்கேட்டிங் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இடையேயான இப்போட்டிகள் தூத்துக்குடி காமராஜ் பள்ளியில்

நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். போட்டியை காமராஜ் கல்விக் குழுச் செயலா் சோமு தொடங்கி வைத்தாா்.

சிலம்பம் போட்டியில் வீரத்தமிழா் சிலம்பாட்டக் கலைக் குழு முதலிடமும், தமிழா்களின் வீர விளையாட்டு கலைக்குழு 2-ஆம் இடமும் பெற்றன. ஸ்கேட்டிங் போட்டியில் ரஜோ குழு முதலிடமும், சிகரம் ஸ்கேட்டிங் குழு 2-ஆம் இடமும் பிடித்தன. பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் ஆனந்தராஜன், பரிசுகளை வழங்கினாா். இதில், பள்ளி முதல்வா் காா்மெல் சுமிதா, உடற்கல்வி ஆசிரியா்கள் மணிகண்டன், செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.