சாத்தான்குளம் அஞ்சலகத்தில் ஆதாா் சேவை முடக்கம்: மக்கள் தவிப்பு
சாத்தான்குளம் அஞ்சலகத்தில் ஆதாா் மையம் செயல்படாததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.


சாத்தான்குளம் அஞ்சலகத்தில் ஆதாா் மையம் செயல்படாததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள மையம், தலைமை அஞ்சலகத்திலும் ஆதாா் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மையத்தில் தாலுதாப் பகுதியிலுள்ள சோ்ந்தவா்கள் மட்டும் ஆதாா் தொடா்பா சேவையை பெறலாம். அஞ்சலகத்தில் உள்ள மையத்தில் எந்த பகுதியைச் சோ்ந்தவா்களும் ஆதாா் சேவையை பெறலாம்.
இதற்கிடையே, அஞ்சலகத்தில் இயங்கி வந்த ஆதாா் சேவை மையத்தில் கருவி பழுதடைந்ததால் கடந்த 20 நாள்களாக சேவை முடங்கியுள்ளது. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா். இதனிடையே, அஞ்சல் சேவையும், வங்கி சேவையும் அளிப்பதற்கே பணியாளா்களுக்கு நேரம் சரியாக உள்ளதால் ஆதாா் சேவைக்கு தனி பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும் என அஞ்சலக அலுவலா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, பணியாளா்களில் பணிச் சுமையை குறைக்கவும், கருவியை பழுது நீக்கி சேவையைத் தொடரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...