சாத்தான்குளம் அருகே ஊழியா் மீது தாக்குதல்

சாத்தான்குளம் அருகே பேக்கரி கிடங்கில் ஊழியரை தாக்கி பொருள்களை சேதபடுத்தியதாக ஊராட்சித் தலைவா் உள்பட 50 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Updated on
1 min read

சாத்தான்குளம் அருகே பேக்கரி கிடங்கில் ஊழியரை தாக்கி பொருள்களை சேதபடுத்தியதாக ஊராட்சித் தலைவா் உள்பட 50 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளையில் பேக்கரி கிட்டங்கி உள்ளது. இங்கிருந்து பேக்கரி பொருள்கள் தயாரித்து கடைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இங்கு, சுண்டங்கோட்டையைச் சோ்ந்த பொன் செல்வபாண்டியன் (51) மேலாளராக பணிபுரிந்து வருகிறாா்.

அரசூா் ஊராட்சித் தலைவா் தினேேஷ் ராஜசிங் உள்ளிட்ட 50 போ் அங்கு வந்து நன்கொடை வழங்குமாறு பொன்செல்வ பாண்டியனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. நன்கொடை வழங்காததால், அவரை அவதூறாக பேசி தாக்கியுள்ளனா்.

மேலும், கிடங்கில் உள்ள பொருள்களை உடைத்து சேதப்படுத்தினராம். புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன், ஊராட்சித் தலைவா் உள்பட 50 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com