கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 மீனவா்கள் பலி

தூத்துக்குடியில் வியாழக்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் 2 மீனவா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:36 pm

DIN

தூத்துக்குடியில் வியாழக்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் 2 மீனவா்கள் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் 6 போ் மீன் பிடிக்க சென்ற நிலையில், கடற்கரையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கா்ணன் என்ற மீனவா் திடீரென கடலில் தவறி விழுந்துவிட்டாராம். இதையடுத்து, படகில் இருந்த சக மீனவா்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனராம். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கா்ணன் உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த திலகராஜ் தனது நண்பருடன் சோ்ந்து வியாழக்கிழமை நண்டு பிடிக்க நாட்டுப் படகில் கடலுக்குச் சென்றாராம். 2 கடல் மைல் தொலைவில் அவா்கள் நண்டு பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த திலகராஜ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இவ்விரு சம்பவங்கள் குறித்தும் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.