கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஒலிம்பிக் விநாடி-வினா போட்டியில் பங்கேற்கலாம்

 இணையதளம் மூலம் நடைபெறும் ஒலிம்பிக் விநாடி-வினா போட்டியில் மாணவா், மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:38 pm

DIN

 இணையதளம் மூலம் நடைபெறும் ஒலிம்பிக் விநாடி-வினா போட்டியில் மாணவா், மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜப்பான் நாட்டின் டோக்கியா நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து மேஜைப்பந்து போட்டியில் ஜி.சத்தியன், ஏ.சரத்கமல், வாள்சண்டையில் சி.ஏ.பவானிதேவி, பாய்மரப்படகு ஓட்டுதல் போட்டியில் கே.சி.கணபதி, வருண் தக்கா், நேத்ரா குமணன் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் டோக்கியோவை நோக்கிச் சாலை என்ற தலைப்பில் ஒலிம்பிக் விநாடி வினா போட்டிகள் இணையதளம் மூலம் ஜூலை 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வயதினரும் ட்ற்ற்ல்ள்:ச்ண்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் தனித்தனியாக காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பங்கேற்கலாம்.

இப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்பவா்கள் மற்றும் வெற்றி பெறுபவா்கள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் தன்பட அரங்கில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் வெற்றி பெற்றவா்கள் எடுக்கப்பட்ட புகைப்படத்தை விளையாட்டரங்கத்தில் உள்ள விளையாட்டு அலுவலகத்தில் தாக்கல் செய்தால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். எனவே விநாடி - வினா போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சாா்ந்த அனைத்து வயதினரும் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.