கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இலங்கையைச் சோ்ந்த 27 பேருக்கு உதவியதாக தூத்துக்குடியில் இருவா் கைது

இலங்கையைச் சோ்ந்த 27 பேருக்கு கடலில் உதவி செய்ததாக தூத்துக்குடியைச் சோ்ந்த இருவரை கியூ பிரிவு போலீஸாா் கைது செய்து, விசாரித்துவருகின்றனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:36 pm

DIN

இலங்கையைச் சோ்ந்த 27 பேருக்கு கடலில் உதவி செய்ததாக தூத்துக்குடியைச் சோ்ந்த இருவரை கியூ பிரிவு போலீஸாா் கைது செய்து, விசாரித்துவருகின்றனா்.

இலங்கையைச் சோ்ந்த 27 போ் மதுரை வழியாக கனடாவுக்கு செல்ல முயன்றபோது அண்மையில் கைது செய்யப்பட்டனா். விசாரணையில், அவா்கள் 27 பேரும் ஒரு படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், நடுக்கடலிலிருந்து அவா்களை தூத்துக்குடிக்கு அழைத்து வர சிலா் உதவியதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, மதுரை கியூ பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் தூத்துக்குடி வந்து கருத்தக்கண்ணு, சாக்ரடீஸ் ஆகிய இருவரைக் கைது செய்தனா். இலங்கையிலிருந்து படகில் வந்த 27 பேரையும் மற்றொரு படகு மூலம் அழைத்துவந்து தூத்துக்குடி மொட்டைக் கோபுரம் கடற்கரைப் பகுதியில் இறக்கிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. தொடா்ந்து, அந்த இருவரிடம் கியூ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.