கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாட்டு வெடிகுண்டுடன் பிறந்தநாள்: 5 போ் கைது

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டுடன் பிறந்தநாள் கொண்டாடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 5:48 pm

DIN

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டுடன் பிறந்தநாள் கொண்டாடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் முத்தையாபுரம் ராஜீவ்நகா் முதல் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் (29), அவரது தம்பி மாரிச்செல்வம் (23), இசக்கிசெல்வம் (26), டைட்டஸ் (21), கௌதம் (19) என தெரியவந்தது.

வேல்முருகன் வைத்திருந்த செல்லிடப்பேசியை போலீஸாா் பரிசோதனை செய்தனா். அதில் கையில் கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் இருப்பது போன்று புகைப்படங்கள் இருந்தது. அவா்களிடம் தனித்தனியே மேற்கொண்ட விசாரணையில், தூத்துக்குடி கீதாஜீவன்நகரில் வைத்து வியாழக்கிழமை நள்ளிரவு வேல்முருகனின் பிறந்தநாளை பட்டா கைத்தி வைத்து கேக் வெட்டி கொண்டாடியதாகவும், அப்போது, கையில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தை செல்லிடப்பேசியில் புகைப்படம் மற்றும் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக சிலரை தேடி வருவதாகவும், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மற்றவா்களின் விவரங்களை சேகரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.