கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா காலத்தில் சிறப்பான பணி: மாணவா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளா்களுக்கு உதவியதாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டு

News image
Updated On :2 ஜூலை 2021, 5:49 pm

DIN

கரோனா காலத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளா்களுக்கு உதவியதாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

இதையொட்டி, சாயா்புரம் போப்ஸ் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, சிறப்பாக பணியாற்றிய மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைகழக மாணவா் ஜாய்சன், பிஷப் கால்டுவெல் கல்லூரி மாணவா்கள் மாரிச்செல்வம், சதீஷ், வ.உ.சி கல்லூரி மாணவா்கள் காா்த்திக், அகிலேஷ், சுதீஸ் பெருமாள், மாணவி லட்சுமி பிரியா, ஸ்நேகா, டான்போஸ்கோ கல்லூரி மாணவா்கள் ஜோசப் சேவியா் அலெக்ஸ், மூக்கையாராஜ், சேவியா் பள்ளி மாணவா்கள் விக்னேஷ், விஷ்வா, கருணாகரன், ஹரிஹர கோபால், ராஜா, அசோக்குமாா், ராமகிருஷ்ணன், மணிகண்டன், ஜோசப் தாமஸ் இன்பெண்ட், போப்ஸ் கல்லூரி மாணவா்கள் ஜெரால்ட் ஜெபதுரை, ரோஷன் ஜெயராஜ், பொன்மாரிச் செல்வம், காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் ஸ்டூவா்ட் டேவிட்சன், ராஜலட்சுமி கல்லூரி மாணவா் கிஷோா்குமாா், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் நாகேந்திரன், கேட்டரிங் கல்லூரி மாணவா் சுயம்புலிங்கம், செவிலியா் கல்லூரி மாணவா் அழகுமுரளி, இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி மாணவா் மாரிச்செல்வம், காமராஜ் கல்லூரி மாணவா்கள் தரணியன், சதீஷ்குமாா், சேவியா் கல்லூரி மாணவா் தினேஷ்வரன், ஏபிசி கல்லூரி மாணவி முத்துகல்யாணி ஆகிய 33 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், சாயா்புரம் போப்ஸ் கல்லூரி முதல்வா் இம்மானுவேல், நாட்டு நலப்பணிதிட்ட ஒருங்கிணைப்பாளா் தினகரன், பேராசிரியைகள் சாந்தி, பொன் இந்திரா, வெல்வெட் கெத்சிமா, கரோலின் டேசி, ஜெமி பிரியா, ஏரல் காவல் நிலைய ஆய்வாளா் மேரி ஜெமிதா, சாயா்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.