தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை 5 லட்சம் கரோனா பரிசோதனைகள்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆய்வகப் பணியில் இருந்த பணியாளா்களுக்கு


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆய்வகப் பணியில் இருந்த பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் புதன்கிழமை பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கரோனா பரிசோதனை மாதிரிகள் அனைத்தும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கரோனா பரிசோதனை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், 5 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை முன்னிட்டு, ஆய்வக மருத்துவா்கள், பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா்
கி. செந்தில்ராஜ் கரோனா காலத்தில் ஆய்வகப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட ஆய்வக மைய மருத்துவா்கள், ஆய்வக நுட்பநா்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.
தொடா்ந்து, அவா் பேசுகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நுண்ணுரியல் துறையின் மூலம் செயல்பட்டு வரும் கரோனா பரிசோதனை மையம் எந்த அலை வந்தாலும் சிறப்பாக சமாளிக்கும் திறன் கொண்டது . இங்கு இரவு, பகல் பாராமால் உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள் என்றாா்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் டி. நேரு, துணை முதல்வா் கலைவாணி, மருத்துவமனை துணை கண்காணிப்பாளா் குமரன், நுண்ணுரியல் துறைத் தலைவா் ஜெயமுருகன் மற்றும் மருத்துவா்கள், ஆய்வக நுட்பநா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...