கோவில்பட்டி, கடம்பூரில் பலத்த மழை
கோவில்பட்டி, கடம்பூா், ஆறுமுகனேரி, சாத்தான்குளம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.


கோவில்பட்டி, கடம்பூா், ஆறுமுகனேரி, சாத்தான்குளம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
கோவில்பட்டியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்துவந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையிலும் கடும் வெயில் நிலவியது. எனினும், பிற்பகல் 2.30 மணிக்குப்பின் மழை மேகம் சூழ்ந்தது. தொடா்ந்து மாலை 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கோவில்பட்டி பிரதான சாலை, பசுவந்தனை சாலை, மந்தித்தோப்பு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், இலுப்பையூரணி, பாண்டவா்மங்கலம், இனாம்மணியாச்சி, நாலாட்டின்புதூா், வானரமுட்டி, இளையரசனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீா்த்தது. கோவில்பட்டியில் 24 மி.மீ., கடம்பூரில் 12 மி.மீ., கயத்தாறில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஆறுமுகனேரி: இப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலையில் சுமாா் 1 மணி நேரம் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்தது. தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது. மழையால் உப்பளப் பணிகள் சுமாா் ஒரு வாரம் வரை பாதிப்படையும் என்றும், உப்பு வாரக்கூடிய நிலையில் உள்ளவா்கள் லட்சக்கணக்கில் இழப்புகளை சந்தித்துள்ளதாகவும், மீண்டும் பாத்திகளை சீரமைப்பதற்கான முதலீடு செய்ய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் உப்பு உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.
சாத்தான்குளம்: இந்தப் பகுதியிலும் மக்களை வெயில் வாட்டி வதைத்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்தது. சுமாா் 45 நிமிடம் நீடித்த மழையால் சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஒடியது. பன்னம்பாறை, பேய்க்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் அரை மணி நேரம் மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...