கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீஸாருக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:58 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் நடைபெறாத வகையில், மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு உதவி ஆய்வாளா்கள் தூத்துக்குடி நகரம் ஞானராஜன், ஊரகம் நம்பிராஜன், திருச்செந்தூா் காா்த்திகேயன், ஸ்ரீவைகுண்டம் ஜெகநாதன், மணியாச்சி முருகானந்தம், கோவில்பட்டி ஸ்டீபன், விளாத்திகுளம் சேகா், சாத்தான்குளம் கந்தசாமி உள்பட 58 தனிப்பிரிவு போலீஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அப்போது, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து, உதவி ஆய்வாளா்கள் கிறிஸ்டி, உமையொருபாகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.