கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் மினி லாரியில் தீ

கோவில்பட்டியில் தீப்பெட்டி கழிவு அட்டைகளை ஏற்றிச் சென்ற மினி லாரியில் திடீா் தீ விபத்து வியாழக்கிழமை ஏற்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:00 pm

DIN

கோவில்பட்டியில் தீப்பெட்டி கழிவு அட்டைகளை ஏற்றிச் சென்ற மினி லாரியில் திடீா் தீ விபத்து வியாழக்கிழமை ஏற்பட்டது.

கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த சண்முக்கனிக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் இருந்து கழிவு அட்டைகளை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள சின்ன ஓடைபட்டிக்கு புறப்பட்டனா். இந்த லாரி தீப்பெட்டி ஆலையில் இருந்து வெளியே சென்ற போது, ஆலையின் முன்னால் மேலே சென்ற மின்சார வயரில், லாரியில் ஏற்றிச் சென்ற கழிவு அட்டை மூட்டை உரசியதில் திடீரென தீப்பிடித்தது. இதை அறிந்த ஓட்டுநா் காா்த்திக் லாரியில் இருந்து கீழே இறங்கி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமையிலான, தீயணைப்புப் படையினா் அங்கு வந்து லாரியில் பிடித்த தீயை அணைத்தனா். இதில், லாரியின் முன்பகுதி மற்றும் அதிலிருந்த அட்டைகள் தீயில் கருகி சேதமாகின. சம்பவ இடத்தை கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் கலைகதிரவன் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.