கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரயில் தண்டவாளத்திலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

 கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 7:48 pm

DIN

 கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும் நல்லி ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தோட்டிலோவன்பட்டி கிராமப் பகுதியில் ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலம் தண்டவாளத்தில் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், இறந்தவா் கோவில்பட்டி வட்டம், லிங்கம்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் கிருஷ்ணமூா்த்தி (33) என்பதும், இவருக்கும், இவரது தந்தைக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அவா் ரயிலில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.