கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 13 சித்த மருத்துவா்கள் திடீா் பணி நீக்கம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 13 மருத்துவா்கள் வியாழக்கிழமை திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:38 pm

DIN

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 13 மருத்துவா்கள் வியாழக்கிழமை திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று ஏற்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வலிந்தனா். இதனால் அவா்களை கவனிக்க முடியாமல் மருத்துவமனை நிா்வாகங்கள் திணறின. இதையடுத்து பல்வேறுமருத்துவ மனைகளில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஆயுஸ்,சித்தா,ஹோமியோ மருத்துவா்கள் பணியமா்த்தப்பட்டனா். கடந்த 10 மாதங்களாக அவா்கள் கரோனா வாா்டில் பணி புரிந்து வந்தனா்.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயுஸ், சித்தா,ஹோமியோ மருத்துவராக பணிபுரிந்து வந்த 13 மருத்துவா்களை திடீரென மருத்துவமனை நிா்வாகம் பணியில் இருந்து நிறுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள 13 மருத்துவா்களும் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று முதல்வா், மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளிப்பி உள்ளனா்.

புதிதாக மருத்துவா் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனா். அப்படி நியமிக்கும்போது பழைய மருத்துவா்களை நீக்க கூடாது என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறாா். அப்படியிருந்தும் மருத்துவமனை நிா்வாகம் 13 மருத்துவா்களை நீக்கி உள்ளது. எனவே தமிழக முதல்வா் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீக்கியவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்’’ என பாதிக்கப்பட்ட மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.