கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: கம்யூனிஸ்ட்கள் 3 நாள் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாள்கள் ஆா்ப்பாட்டம் நடத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:36 pm

DIN

 பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாள்கள் ஆா்ப்பாட்டம் நடத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.எஸ்.அா்ஜுனன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் அழகுமுத்து பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் மாநகா் மாவட்டச் செயலா் அகமது இக்பால், தெற்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் தா.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் பி.ஞானசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும், அதன் மீதான கலால் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், அத்தியாவசியப் பொருகள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத்தில் மூன்று நாள்கள் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஜூன் 28இல் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்திலும், ஜூன் 29இல் கோவில்பட்டி, விளாத்திகுளத்திலும், ஜூன் 30இல் ஏரல், திருச்செந்தூரிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கே.எஸ். அா்ஜுனன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.