ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய நிா்வாகத்தை முடக்குவதாக ஆட்சியரிடம் புகாா்
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியக் குழு நிா்வாகத்தை செயல்படவிடாமல் திமுகவினா் தடுப்பதாக தலைவா் மற்றும் உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.


ஸ்ரீவைகுண்டம் ஒன்றியக் குழு நிா்வாகத்தை செயல்படவிடாமல் திமுகவினா் தடுப்பதாக தலைவா் மற்றும் உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியக் குழுத் தலைவா் வசந்தா, துணைத் தலைவா் விஜயன் மற்றும் ஒன்றிய கவுன்சிலா்கள் சோமசுந்தரி சித்திரை நயினாா், சுந்தரி, சித்ரா சயணன், ரமேஷ், தனேஷ், முத்து செல்வன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜியிடம் வியாழக்கிழமை அளித்த மனு: , திமுகவினா் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக் குழு நிா்வாகத்தை செயல்படவிடாமல் தடுப்பதாகவும், தங்கள் ஆதரவு கவுன்சிலா்களை திமுகவுக்கு ஆதரவு தர செல்லி மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனா்.
அப்போது, மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் யு.எஸ். சேகா், சாத்தான்குளம் ஒன்றியச் செயலா் சௌந்திரபாண்டி, மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளா் ஜெ. தனராஜ், சாத்தான்குளம் ஒன்றிய துணைத் தலைவா் அப்பாதுரை உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...