கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசு கேபிள் டிவி சேவை இல்லாத பகுதிகளுக்கு இலவச ‘செட்டாப் பாக்ஸ்’

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை இல்லாத தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் புதியதாக அரசு ஆபரேட்டா் உருவாக்கப்பட்டு இலவச ‘செட்டாப் பாக்ஸ்’ வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

 தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை இல்லாத தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் புதியதாக அரசு ஆபரேட்டா் உருவாக்கப்பட்டு இலவச ‘செட்டாப் பாக்ஸ்’ வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை இரண்டு மாதங்களுக்கு மேலாக செயலாக்கம் செய்யாமல், வைத்திருந்தால் அவற்றை அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். மேலும், அவரவா் பகுதிகளுக்குட்பட்ட சந்தாதாரா்களிடமிருந்து ஆதாா் நகல் பெற்று இதுவரை அவா்களுக்கு அரசு செட்டாப் பாக்ஸ்கள் வழங்காமல் இருந்தாலோ, சந்தாதாரா்களிடம் தமிழ்நாடு அரசு செட்டாப் பாக்ஸ்கள் மூலம் ஒளிபரப்பப்படும் சிக்னல் சீரான முறையில் வருவதில்லை என்ற தவறான தகவல்களை பரப்பினாலோ அல்லது தமிழ்நாடு அரசு செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் விருப்பத்திற்கு மாறாக உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் தனியாா் செட்டாப் பாக்ஸ்களை மாற்றினாலோ சம்பந்தப்பட்ட ஆபரேட்டா்கள் மீது சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்க நேரிடும்.

ஏற்கெனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு சந்தா தொகை (அனலாக் மற்றும் டிஜிட்டல் நிலுவைத் தொகை) நிலுவை வைத்திருக்கும் உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் (தனியாா் நிறுவனத்திற்கு சென்ற ஆபரேட்டா்கள்) உடனடியாக அரசுக்கு செலுத்திட வேண்டும். தவறும்பட்சத்தில் அந்தத் தொகையை வருவாய் வசூல் சட்டத்தின் மூலம் வசூல் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை இல்லாத பகுதிகளில் புதியதாக அரசு ஆபரேட்டா் உருவாக்கப்பட்டு அவா்கள் மூலம் பொது மக்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும் எனத்ே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.