கரோனா கட்டுப்பாட்டு அறையில்சிறப்பாக பணி செய்தவா்களுக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கரோனா கட்டுப்பாட்டு அறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டது.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கரோனா கட்டுப்பாட்டு அறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
கரோனா தொற்று தொடா்பாக பொதுமக்கள் வசதிக்காக தூத்துக்குடியில் ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட கரோனா கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில்,
சிறப்பாக பணி செய்த அலுவலா்களுக்கு சான்று வழங்கி ஆட்சியா் கி.செந்தில்ராஜ் பேசுகையில், கரோனா தீநுண்மி உருமாற்றம் அடைந்து மூன்றாவது அலை வந்தாலும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பேரிடா் காலங்களில் ஒருங்கிணைந்து பணியாற்ற அரசு அதிகாரிகள், பணியாளா்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆட்சியா் ஆய்வு: தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள வித்ய பிரகாசம் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை புனரமைத்தல் தொடா்பாக
ஆட்சியா் கி.செந்தில்ராஜ் அலுவலா்களுடன் கள ஆய்வு மேற்கொண்டாா். பழைய கழிவறையை இடித்து கட்டுதல், சுற்றுச்சுவரை உயரப்படுத்தும் வகையில் கிரில் அமைத்தல், வகுப்பறை முழுவதையும் புதுப்பித்தல் மற்றும் சிறப்பு குழந்தைகளை பயிற்றுவிக்கும் வகையில் வசதிகள் உள்ளிட்ட
வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக ஆய்வு செய்தாா். இதற்கான திட்ட மதிப்பீடு தயாா் செய்து அறிக்கை அளிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
பின்னா், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் கூடம், குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளியில் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குப்பைகளை உரமாக மாற்றும் இயந்திரம் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...