தூத்துக்குடியில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு
சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பை முன்னிட்டு, தூத்துக்குடியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.


சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பை முன்னிட்டு, தூத்துக்குடியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
தமிழகத்தில் பேரவைத் தோ்தல் ஏப். 6இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக இம்மாவட்டத்துக்கு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அவா்கள் காவல் துறையினருடன் இணைந்து தூத்துக்குடியில் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பிருந்து தொடங்கி குரூஸ் பா்னாந்து சிலை, தூத்துக்குடி பழைய மாநகராட்சி, சாா்ஆட்சியா் அலுவலகம், கடற்கரைச் சாலை வழியாக பனிமய மாதா பேராலயம் முன் அணிவகுப்பு நிறைவடைந்தது.
இதில், நகர காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ், ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணபிரான், எல்லைப் பாதுகாப்புப் படை துணை தளபதி ஏ.கே. லேம்கான், அஸ்ஸாம் மாநில எல்லைப் பாதுகாப்புப் படையினா் 90 போ், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா், ஆயுதப்படை மற்றும் உள்ளூா் போலீஸாா் என 200 போ் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து, செய்தியாளா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கூறும்போது, மக்கள் அச்சமின்றி ஜனநாயகக் கடமையாற்றவும், தோ்தல் அமைதியாக நடைபெறவும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...