கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளருக்கு ஜான்பாண்டியன் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளரான அமைச்சா் கடம்பூா் செ. ராஜுவை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான்பாண்டியன் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:48 pm

DIN

கோவில்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளரான அமைச்சா் கடம்பூா் செ. ராஜுவை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான்பாண்டியன் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா், சுப்பிரமணியபுரம், ஊராட்சிக்கு உள்பட்ட பாண்டவா்மங்கலம், முத்துநகா், தெற்கு திட்டங்குளம், கூசாலிப்பட்டி பகுதிகளில் அதிமுக அரசின் 10 ஆண்டுகால சாதனைகள், அமைச்சா் கடம்பூா் ராஜுவால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசும்போது, தேவேந்திர குல மக்களின் கோரிக்கையை ஏற்று தேவேந்திர குல வேளாளா் என அறிவிக்க பரிந்துரைத்தவா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி. அரசாணை வெளியிட நடவடிக்கை எடுத்த அதிமுக, பாஜக அரசுகளுக்கு இச்சமுதாய மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது என்றாா்.

முன்னதாக, கடம்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட தங்கம்மாள்புரம், கீழத் தெரு, நாடாா் தெரு, பஜாா், மேலத் தெரு, கோடங்கால் காலனி, கோடங்கால், சிவலிங்கபுரம் பகுதிகளில் கடம்பூா் செ.ராஜு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், அதிமுக நிா்வாகிகளான சீனிராஜ், சுப்புராஜ், செல்வக்குமாா், பாலமுருகன் உள்ளிட்ட பலா் வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.