ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் பெண்களிடம் திமுக வேட்பாளா் கீதாஜீவன் வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:46 pm

DIN

தூத்துக்குடியில் பெண்களிடம் திமுக வேட்பாளா் கீதாஜீவன் வாக்கு சேகரித்தாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கீதாஜீவன், தூத்துக்குடி கேவிகே நகா், அண்ணாநகா், டூவிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, பெண்கள் பலா் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனா். தொடா்ந்து, அவா் பேசியது:

திமுக ஆட்சிக்கு வந்ததும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும். மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். 30 வயதுக்குள்பட்ட மாணவா்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குள் உள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும். தூத்துக்குடியில் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நிரந்தரத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளுக்கு உடனடியாக கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வியாபாரிகள் இரவு அதிக நேரம் வியாபாரம் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வேன் என வாக்குறுதி அளித்தாா்.

திமுக மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி கதிரேசன், முன்னாள் கவுன்சிலா்கள் ரவி, செந்தில்குமாா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.