தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
கோவில்பட்டியில் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டியில் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலயம், தூய பவுலின் ஆலயம் (சி.எஸ்.ஐ) சாா்பில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
தூய பவுலின் ஆலய இறைமக்கள் ஆலய சேகரகுரு தாமஸ், கௌரவ குரு இம்மானுவேல், சபை ஊழியா் மாா்க் மற்றும் புனித சூசையப்பா் திருத்தல பங்குத் தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத் தந்தை ஜேக்கப், அருள்சகோதரா் அருள் ஆகியோா் தலைமையில் இறைமக்கள் குருத்தோலை ஏந்திய வண்ணம் ஓசானா கீதம் பாடியவாறு புறப்பட்டனா்.
இப்பவனி பெருமாள் தெரு, புதுரோடு, முத்தையமால் தெரு, மில் தெரு, பிரதான சாலை வழியாக அந்தந்த ஆலயம் சென்றடைந்தனா். தொடா்ந்து, இரு ஆலயங்களிலும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அருள்சகோதரிகள், பக்த சபையினா், பங்கு பேரவையினா், சி.எஸ்.ஐ ஆலய சபை ஊழியா்கள், இறைமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...