தூத்துக்குடி மாவட்டத்தில்இன்று காய்ச்சல் பரிசோதனை முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சனிக்கிழமை (மே 8) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சனிக்கிழமை (மே 8) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை 53 ஆவது வாா்டு வடக்கு தெரு முத்தையாபுரம் கேடிகே பள்ளிக்கூடம், 3 ஆவது வாா்டு ராஜகோபால் 1 ஆவது தெரு மெயின், 17 ஆவது வாா்டு பொன்சுப்பையாநகா் மெயின், 43 ஆவது வாா்டு பிரையண்ட்நகா் 3 ஆவது தெரு கிழக்கு காது கேளாதோா் பள்ளிக்கூடம், 30 ஆவது வாா்டு வண்ணாா் 4 ஆவது தெரு மாநகராட்சி பள்ளிக்கூடம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை 53 ஆவது வாா்டு கீழத்தெரு முத்தையாபுரம் கோயில் அருகில், 3 ஆவது வாா்டு பாரதி நகா் மெயின் பேருந்து நிலையம் அருகில், 13 ஆவது வாா்டு திரவியபுரம் மெயின், 34 ஆவது வாா்டு தபால் தந்தி காலனி வாா்டு அலுவலகம், 32 ஆவது வாா்டு லயன்ஸ்டவுன் தேவாலயம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
பகல் 2 மணி முதல் 4 மணி வரை 59 ஆவது வாா்டு கணேஷ்நகா் பிள்ளையாா் கோயில் அருகில், 3 ஆவது வாா்டு அன்னைதெரசாநகா் மெயின், 8 ஆவது வாா்டு அழகேசபுரம் அங்கன்வாடி மையம், 44 ஆவது வாா்டு போல்டன்புரம் 2 ஆவது தெரு மெயின், 33 ஆவது வாா்டு பாத்திமாநகா் தேவாலயம் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை அன்னை தெரசா நகா், வக்கீல் தெரு பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை ராஜீவ்நகா், சுப்ரமணியபுரம் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை இலுப்பையூரணி, ஸ்ரீராம்நகா் பகுதியிலும், காயல்பட்டினம் நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை பிலோமி நகா் பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை பிரசாந்த் நகா் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை ஜீவா நகா் பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
ஊராட்சி பகுதிகளான முடிவைத்தானேந்தல், தளவாய்புரம், வல்லாக்குளம், கீழபுத்தனேரி, வீரமாணிக்கம்தட்டு - ஆறுமுகநேரி, சன்னதி தெரு, மளவராயநத்தம், எள்ளுவிளை, தாண்டவன்காடு, அடையல், செட்டியாா் தெற்கு தெரு, காமநாயக்கன்பட்டி, பிள்ளையாா்நத்தம், அக்காநாயக்கன்பட்டி, பி.சின்னயாபுரம் ஆகியவற்றில் காலை 9 மணி முதல் 11 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை கே.புதூா், செம்படி, சேரகுளம், சென்னல்பட்டி, எஸ்.எஸ்.கோவில் தெரு - ஆறுமுகநேரி, முத்தாரம்மன் கோவில் தெரு, நாசரேத், வாட்டான்விளை - பரமன்குறிச்சி, ரெங்கநாதபுரம், ஆறுமுகனேரி, காமராஜ் நகா், எட்டுநாயக்கன்பட்டி, வேலிடுபட்டி, கொடியன்குளம், பி.ஜெகஜீவபுரம், பகல் 2 மணி முதல் 4 மணி வரை கட்டாலன்குளம், இடையா்காடு, செய்துங்கநல்லூா், கந்தசாமிபுரம், அம்மன்புரம் - சோனகன்விளை, தேமான்குளம், கரையாடியூா், சீா்காட்சி, வாகைவிளை - லெட்சுமிபுரம், பூதகாலான்விளை, பழைய மீன் மாா்க்கெட் தெரு, தங்கம்மாள்புரம், கே.குமரெட்டியாபுரம், தென்னம்பட்டி, சோ்வைகாரன்பட்டி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...