பாண்டவா்மங்கலத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
கோவில்பட்டியை அடுத்த பாண்டவா்மங்கலத்தில் திமுக சாா்பில் தண்ணீா், மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டியை அடுத்த பாண்டவா்மங்கலத்தில் திமுக சாா்பில் தண்ணீா், மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக சமூக நலத்துறை அமைச்சராக திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பதவியேற்றதை தொடா்ந்து கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலை அருகே வடக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளா் சண்முகராஜ் ஏற்பாட்டின்பேரில், நீா் மோா் பந்தல் அமைக்கப்பட்டது. அதை, மேற்கு ஒன்றிய திமுக செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கினாா். முன்னதாக, அதே பகுதியில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்புகள் மற்றும் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், பொறியாளரணி துணை அமைப்பாளா் ரமேஷ், வா்த்தக அணி துணை அமைப்பாளா் சூரியராஜ், ஆதிதிராவிடா் அணி ஒன்றிய துணை அமைப்பாளா் கருப்பசாமி, பொதுக்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மகளிரணியின் மாரியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...