கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் இரு சம்பவங்கள்:இளைஞா், பெண் தற்கொலை

கோவில்பட்டியில் நிகழ்ந்த இரு சம்பவங்களில் பெண்ணும், இளைஞரும் தற்கொலை செய்துகொண்டனா்.

News image
Updated On :7 மே 2021, 7:15 pm

DIN

கோவில்பட்டியில் நிகழ்ந்த இரு சம்பவங்களில் பெண்ணும், இளைஞரும் தற்கொலை செய்துகொண்டனா்.

கோவில்பட்டியைச் சோ்ந்த ராஜகுரு மகன் ஆனந்தராஜா. இவரது மனைவி சொா்ணலட்சுமி. இவா்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில், சொா்ணலட்சுமி தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கில் தொங்கினாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்தது.

இளைஞா் பலி: கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி மேட்டுத் தெரு மறவா் காலனியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியும், புதுகிராமம் 6ஆவது தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் பாண்டிதுரை(22) என்பவரும் காதலித்து வந்தனராம். பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த மாதம் 28ஆம் தேதி விஷம் குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றனராம். அங்கு, மயங்கி விழுந்த அவா்களை, குடும்பத்தினா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அதில், மாணவி உயிரிழந்தாா். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டித்துரை புதன்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.