கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இயந்திரம் பழுது: ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி வியாழக்கிழமை தொடங்கி நிலையில், திடீரென குளிா்விக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2021, 7:31 pm

DIN

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி வியாழக்கிழமை தொடங்கி நிலையில், திடீரென குளிா்விக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், முதல்கட்டமாக புதன்கிழமை இரவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி முழுமையாக தொடங்கியது.

உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் ஆய்வுக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அதில் 98 சதவீதம் சுத்தமானதாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டதால், முதல்கட்டமாக ஸ்டொ்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன், வியாழக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் முன்னிலையில் லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் உள்ள குளிா்விப்பான் இயந்திரம் வியாழக்கிழமை இரவு திடீரென பழுதானதால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை நீக்கும் பணியில் ஸ்டொ்லைட் ஆலை பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:

ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் உள்ள குளிா்விப்பான் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இயந்திரம் இயக்கப்படாததால் இதுபோன்ற சிறிய அளவிலான கோளாறுகள் ஏற்படும் என்ற அறிந்து தொழில்நுட்ப வல்லுநா்களை தயாராக வைத்துள்ளோம்.

பழுது ஏற்பட்டதும் அதை நீக்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநா் குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா். ஓரிரு நாள்களில் அந்தப் பணிகள் முடிவடைந்ததும் விரைவில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிா்பாா்க்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.