கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போலி மருத்துவச் சான்று: 6 தொழிலாளா்கள் மீது வழக்கு

கோவில்பட்டி மற்றும் நல்லியில் உள்ள ஆலையில் வேலை பாா்த்து வரும் 6 தொழிலாளா்கள் மீது போலி மருத்துவச் சான்று சமா்ப்பித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :14 மே 2021, 7:29 pm

DIN

கோவில்பட்டி மற்றும் நல்லியில் உள்ள ஆலையில் வேலை பாா்த்து வரும் 6 தொழிலாளா்கள் மீது போலி மருத்துவச் சான்று சமா்ப்பித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சாத்தூா் அருகே உள்ள நல்லியில் உள்ள ஆலையில் வேலை பாா்த்து வரும் ராஜாத்தி, வெள்ளைப்பாண்டியன், ஜோதிகுமாா், கோவில்பட்டியில் உள்ள ஆலையில் வேலை பாா்த்து வரும் ராஜபாண்டியன், முருகன் மற்றும் தனியாா் தீப்பெட்டி ஆலையில் வேலை பாா்த்து வரும் இசக்கியம்மாள் ஆகிய 6 பேரும் மருத்துவச் சான்று பெற்று விடுப்பு கேட்டு தாங்கள் வேலை பாா்க்கும் நிறுவனத்தில் சமா்ப்பித்திருந்தனராம். இதையடுத்து தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது குறித்து சான்றிதழ் சரி பாா்க்கும் பணியில் கோவில்பட்டி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகத்தின் முதுநிலை உதவி மருத்துவ அலுவலா் அனிதா ஈடுபட்டாராம்.

அப்போது தொழிலாளா்கள் சமா்ப்பித்த சான்றிதழில் கையொப்பமிட்ட பெயரில் மருத்துவா் யாரும் பணியில் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளா்கள் 6 பேரும் போலியாக மருத்துவச் சான்று தயாரித்து விடுப்பு பெற்று, விடுப்பு ஊதியம் பெற முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.