கோவில்பட்டியில் எஸ்.பி. தலைமையில் வாகனச் சோதனை
கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில், கோவில்பட்டியில் எஸ்.பி. தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.


கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில், கோவில்பட்டியில் எஸ்.பி. தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா் தலைமையில், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், ஆய்வாளா்கள் சபாபதி (மேற்கு), தங்கராஜ் (கிழக்கு) மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது ஒரு வாகனத்தில் சமூக இடைவெளி இல்லாமல் அதிக நபா்களை ஏற்றி வந்ததையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்ய எஸ்.பி. உத்தரவிட்டாா். தேவையின்றி சுற்றி வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...