கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொடுஞ்செயல் எதிா்ப்புநாள் உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 7:58 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதி மொழி எடுத்துக் கொள்வது வழக்கம். அதன்படி, தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா தலைமையில், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எந்த வகையான கொடுஞ் செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிா்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணா்வு ஆகியவற்றைப் போற்றி வளா்க்கவும், மக்களுடைய உயிா்களுக்கும் மற்றும் நற் பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிா்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்ட வழங்கல் அலுவலா் அபுல்காசிம், ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) கிறிஸ்டோபா் ஜெயராஜ், அலுவலக மேலாளா் (பொது) இளங்கோ, அலுவலக மேலாளா் (குற்றவியல்) ஜான்சன், தோ்தல் வட்டாட்சியா் ரகு, அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

எஸ்.பி. அலுவலகம்: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் தலைமையிடத்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையில் காவல் துறை அமைச்சுப் பணியாளா் நிா்வாக அதிகாரிகள் சுப்பையா, சங்கரன், அலுவலக கண்காணிப்பாளா்கள் மாரிமுத்து, மாரியப்பன், அருணாச்சலம், கணேச பெருமாள், மாரிமுத்து உள்ளிட்டோா் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.