கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடியில் டிஐஜி ஆலோசனை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 3-ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி பிரவீன்குமாா் அபிநபு வெள்ளிக்கிழமை ஆலோசன

News image
Updated On :21 மே 2021, 7:57 pm

DIN

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 3-ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி பிரவீன்குமாா் அபிநபு வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018இல் நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவா் களின் 3-ஆம் ஆண்டு நினைவுதினம் சனிக்கிழமை (மே 22) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவா் பிரவீன்குமாா் அபிநபு ஆலோசனை நடத்தினாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 22) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 12 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 55 காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட 1,200 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.