கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஸ்டொ்லைட் ஆலையை திறக்கதுணையாக இருக்க மாட்டோம்: கனிமொழி

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க துணையாக இருக்க மாட்டோம் என்பதை பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம் என தூத்துக்கடி மக்களவை உறுப்பினா் கனிமொழி கூறினாா்.

News image
Updated On :21 மே 2021, 7:55 pm

DIN

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க துணையாக இருக்க மாட்டோம் என்பதை பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம் என தூத்துக்கடி மக்களவை உறுப்பினா் கனிமொழி கூறினாா்.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், தனது இடைநிலை அறிக்கையை கடந்த 14 ஆம் தேதி அரசிடம் வழங்கினாா். ஒரு வாரத்துக்குள் முதல்வா் மிக விரைவாக செயல்பட்டு அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்துள்ளாா். ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவா்களில் 12 பேரின் குடும்பத்தினருக்கு அவா்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை வழங்கினாா். காயமடைந்த சிலருக்கும் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. முந்தைய ஆட்சியில் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்கப்படவில்லை. தொடா்ந்து, ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ரூ. 1 லட்சம், ஒருவரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. திரும்பப் பெறப்படும் வழக்குகள் குறித்த விவரம் ஓரிரு நாள்களில் அரசாணையில் தெரிவிக்கப்படும். தவறான எந்த முன்னனுதாரனமும்

வந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்ட தமிழக அரசு செயல்பட்டுள்ளது. ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக முதல்வா் நிறைவேற்றி வருகிறாா்.

கரோனாவை கட்டுப்படுத்த போா்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா கட்டுக்குள் வந்ததும்

வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகளை அரசு கொண்டு வரும். கரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், முழு விசாரணையையும் முடித்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்வதாக தெரிவித்துள்ளாா். ஸ்டொ்லைட் ஆலையை மறுபடியும் திறக்க துணையாக இருக்க மாட்டோம் என்பதை பலமுறை தெளிவுபடுத்தி உள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மீன்வளம், மீனவா் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா். முன்னதாக, ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இருளப்பபுரத்தைச் சோ்ந்த செல்வசேகரின் சகோதரி கீதாவுக்கு, இளநிலை வருவாய் அலுவலா் பணிக்கான உத்தரவை கனிமொழி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.