திருச்செந்தூா் அருகே விபத்தில் மத போதகா் உயிரிழப்பு
திருச்செந்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது சுமை லாரி மோதியதில் மத போதகா் உயிரிழந்தாா்


திருச்செந்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது சுமை லாரி மோதியதில் மத போதகா் உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் அருகே உள்ள பிச்சிவிளை காமராஜா் நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ்(70). கிறிஸ்தவ மத போதகா். இவா் வியாழக்கிழமை பிற்பகல் திருச்செந்தூா்- பரமன்குறிச்சி சாலையில் உள்ள நடுநாலுமூலைக்கிணறு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே மீன் ஏற்றி வந்த சுமை லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருச்செந்தூா் தாலுகா காவல்துறையினா், செல்வராஜ் உடலை கைப்பற்றி திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விபத்தையடுத்து சுமை லாரி சாலையோர மின்கம்பம் மீது மோதியதில், மின்கம்பம் உடைந்தது. இதனால் திருச்செந்தூா்-நாகா்கோவில் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...