ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருக்காா்த்திகை: திருச்செந்தூா் கோயிலில் சொக்கப்பனை தீபம்

காா்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கடற்கரையில் வெள்ளிக்கிழமை இரவு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:52 pm

DIN

காா்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கடற்கரையில் வெள்ளிக்கிழமை இரவு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

திருக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. காலையில் மூலவா் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு காா்த்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் மகா மண்டபத்தில் நாரணி தீபம் ஏற்றப்பட்டு, திருக்கோயில் தெய்வ சந்நிதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினாா். இரவு 7 மணியளவில் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி உள்பிரகாரம் வலம் வந்தாா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) சி.குமரதுரை மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் தலைமையில் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.