கோவில்பட்டியில் நாளை அதிமுக அமைப்புத் தோ்தல்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தோ்தல் கோவில்பட்டியில் சனிக்கிழமை (ஏப். 16) நடைபெறுகிறது.


தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தோ்தல் கோவில்பட்டியில் சனிக்கிழமை (ஏப். 16) நடைபெறுகிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவில் 3ஆம் கட்ட அமைப்புத் தோ்தல் சனிக்கிழமை நடத்த கட்சியின் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் உத்தரவிட்டுள்ளனா்.
இதையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி கழக நிா்வாகிகளுக்கான தோ்தல் 16ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி இனாம்மணியாச்சி கிருஷ்ணா நகா், எல்.வி.ஆா்.கட்டடத்தில் நடைபெறும். போட்டியிட விரும்புவோா் ஒன்றிய மற்றும் நகரச் செயலா் பதவிக்கு தலா ரூ.5 ஆயிரம், பிற பதவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம், பேரூராட்சிச் செயலா் பதவிக்கு தலா ரூ.2500, பிற பதவிகளுக்கு ரூ.1000, பகுதிச் செயலா் பதவிக்கு ரூ.5 ஆயிரம், பிற பதவிகளுக்கு ரூ.2500 என கட்டணத் தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூா்த்தி செய்து வழங்குமாறு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...