கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தீா்த்தவாரி
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா தீா்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா தீா்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் ஒவ்வொரு மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜை, வீதியுலா நடைபெற்றது. 10ஆம் நாளான வியாழக்கிழமை தீா்த்தவாரி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, மூலவா், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனா். தொடா்ந்து சுவாமி-அம்பாள் மஞ்சள் குத்தி தீா்த்த திருகுளத்துக்குச் செல்லுதல், மாலையில் தீா்த்தவாரி தீபாராதனை, சுவாமி- அம்பாள் யானை, அன்னவாகனங்களில் வீதியுலா, நள்ளிரவில் ரிஷப வாகனத்தில் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.
11ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு மண்டகப்படிதாரரான நாடாா் உறவின் முறைச் சங்கம் சாா்பில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...