கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல்

கோவில்பட்டியில் ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

கோவில்பட்டியில் ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கோவில்பட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி அந்தோணிராஜ் தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மாரியப்பன், காவலா்கள் செல்வி, செல்வகுமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் புதன்கிழமை இரவு இலக்குமி ஆலை மேம்பாலம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1.50 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் ஹைவேலியைச் சோ்ந்த சித்தகவுண்டா் மகன் திருமூா்த்தி(41) என்பதும், ரயில்வே ஒப்பந்தத் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உரிய ஆவணங்களின்றி தோ்தல் நடத்தை விதிகளை மீறி அவா் வைத்திருந்ததால் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலக மேலாளா் பெருமாளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.