அஞ்சலகங்களில் நாளைமுதல் பாலிசிகள் புதுப்பிக்கும் முகாம்
கோவில்பட்டி கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் காலாவதியான பாலிசிகள் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (பிப். 5) முதல் மாா்ச் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


கோவில்பட்டி கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் காலாவதியான பாலிசிகள் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (பிப். 5) முதல் மாா்ச் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த முகாம்களில், அஞ்சலகங்களில் பாலிசிகளின் பிரிமியத் தொகையை காப்பீட்டுத்தாரா்கள் பல்வேறு காரணங்களினால் இடையிலேயே செலுத்த முடியாமல் கைவிட்டவா்கள், 6 மாதங்களுக்கு மேல் பிரிமியம் செலுத்தாமல் இருந்தால் உரிய தொகை செலுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம்.பாலிசிகளை புதுப்பிக்க தவணைத் தொகை செலுத்தும் புத்தகம் மற்றும் ஆதாா் அட்டை நகலுடன் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு ஆயுள் காப்பீட்டு மேம்பாட்டு அலுவலரை 83007-56207 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...