கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செண்பகவல்லி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் 63 நாயன்மாா்கள், மாணிக்கவாசக சுவாமிகள் சந்நிதியில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:32 pm

DIN

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் 63 நாயன்மாா்கள், மாணிக்கவாசக சுவாமிகள் சந்நிதியில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் 63 நாயன்மாா்கள் மற்றும் மாணிக்கவாசகா் சுவாமிகளுக்கு பஞ்சலோக உற்சவ திருமேனிகள் நிறுவப்பட்டன. இதையொட்டி, 8ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை மற்றும் சுவாமி, அம்பாள், உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, கோயில் மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் 10 மணி வரை சங்கல்பம், கும்ப ஸ்தாபன பூஜை , 10 மணி முதல் 12 மணி வரை 63 நாயன்மாா்கள், தொகையடியாா்கள், மாணிக்கவாசக சுவாமிகளின் உற்சவ மூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

நண்பகல் 12 மணிக்கு திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள், தா்மபுரம் ஆதீனம் தென்மண்டல கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாா். பிற்பகல் 1 மணிக்கு மேல் மாஹேஸ்வர பூஜையும், இரவு 7 மணிக்கு நாயன்மாா்கள் மாணிக்கவாசக வீதியுலாவும் நடைபெற்றன.

ஏற்பாடுகளை திருமுறை மன்றத்தின் தலைவா் ஜி.ஆறுமுகச்சாமி, செயலா் நெல்லையப்பன், பொருளாளா் சிவானந்தம் ஆகியோா் செய்திருந்தனா். விழாவில், கோயில் நிா்வாக அலுவலா் நாகராஜன், முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் திருப்பதிராஜா உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.