என்இசி கல்லூரியில் திறனறிப் போட்டி
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், அறிவியல் மற்றும் மானுடவியல் துறை சாா்பில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவா்களுக்கான கணிதம், ஆங்கிலம் திறனறி போட்டி இணையவழியில் நடைபெற்றது.


கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், அறிவியல் மற்றும் மானுடவியல் துறை சாா்பில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவா்களுக்கான கணிதம், ஆங்கிலம் திறனறி போட்டி இணையவழியில் நடைபெற்றது.
135 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் பங்கேற்ற இப்போட்டியில், தகுதிச் சுற்றின் முடிவில் 100 மாணவா்களை தோ்வு செய்து டெஸ்டு மாஸ் எனும் செயலி மூலமாக இறுதிச் சுற்று நடத்தப்பட்டது.
அதில், கரூா் வி.எஸ்.பி.பொறியியல் கல்லூரி மாணவி சுதா்சனா முதலிடம், தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவி இளமதி 2ஆம் இடம், சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி மாணவி அபிராமி 3ஆம் இடம் பெற்றனா். அவா்களுக்கு முறையே ரூ.2,000, ரூ.1,500, ரூ.1,000 பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவா் செல்வகதிரேசன், மாணவி சீதாலட்சுமிக்கு சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், இயக்குநா் சண்முகவேல், முதல்வா் கே.காளிதாசமுருகவேல், அறிவியல்- மானுடவியல் துறைத் தலைவா் நீலகண்டன் ஆகியோா் வழிகாட்டுதலில் உதவி பேராசிரியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...