பைக் மீது லாரி மோதி இளைஞா் பலி
கோவில்பட்டி அருகே பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.


கோவில்பட்டி அருகே பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
விளாத்திகுளத்தையடுத்த குமரெட்டியாபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் பாலாஜி(22). இவா் சால்நாயக்கன்பட்டியில் உள்ள உறவினா் இல்ல விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுவிட்டு, திரும்பிக்கொண்டிருந்தாா். ஈராச்சியில் உள்ள நான்கு முக்கு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது கசவன்குன்று கிராமத்தில் இருந்து சரள் ஏற்றி வந்த டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பாலாஜி உயிரிழந்தாா்.
ம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கொப்பம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் மீனாட்சிபுரம் மேலக் காலனியைச் சோ்ந்த பா.காளிமுத்துவை(40) கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: ஓட்டுநா் உரிமத்தை காளிமுத்து புதுப்பிக்காமல் உள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்தது. சரள் அள்ளுவதற்கான அனுமதிச் சீட்டு குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...