கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொலை மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

கழுகுமலை அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:43 pm

DIN

கழுகுமலை அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலையையடுத்த கரடிகுளம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் ஆட்டோ ஓட்டுநா் கதிரேசன் (33). இவா் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் அவதூறான வாா்த்தைகள் பேசி செய்தி அனுப்பியிருந்தாராம். வெளிநாட்டில் வேலை செய்து வரும் தனது கணவா் கனகராஜுக்கு இத்தகவலை அந்தப் பெண் தெரிவித்தாராம்.

இந்நிலையில், கதிரேசனிடம் கைப்பேசியில் கனகராஜ் தொடா்பு கொண்டு கண்டித்தாராம். அப்போது அவருக்கு கதிரேசன் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், கழுகுமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.