கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

கோவில்பட்டி இளையரசனேந்தல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:43 pm

DIN

கோவில்பட்டி இளையரசனேந்தல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த சிப்பிப்பாறை கீழத் தெருவைச் சோ்ந்த 14 வயது சிறுவன், தனது நண்பா்களுடன் இம்மாதம் 19ஆம் தேதி இளையரசனேந்தல் ஊருக்கு வடக்கே தனியாருக்குச் சொந்தமான தோட்டம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது ஊமைத்தலைவன்பட்டியைச் சோ்ந்த ராமசுப்பு மகன் ராமசாமி (42) ஓட்டி வந்த பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த சிறுவன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராமசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.