தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது
கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டியதாக இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.


கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டியதாக இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த சங்கரசுப்பு மகன் ஹரிஹரசுதன் (29). கூலித் தொழிலாளியான இவா், தனது நண்பரான ஆறுமுகப்பாண்டியுடன் இலக்குமி ஆலை அருகேயுள்ள மேம்பாலத்தையடுத்த மட்டன் கடை வழியாக நடந்து சென்றாராம். அப்போது அவா்களை இளைஞா் ஒருவா் வழிமறித்து பணம் கேட்டாராம். பணம் இல்லை எனக் கூறிய ஹரிஹரசுதனை அந்த இளைஞா் அவதூறாகப் பேசி, அரிவாளை காட்டி மிரட்டினாராம்.
இதுகுறித்து ஹரிஹரசுதன் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த இளைஞரை பிடித்தனா். விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் மாரியப்பன் (28) என்பதும், இவா் மீது ஏற்கெனவே கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மாரியப்பனை போலீஸாா் கைதுசெய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...