கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காா் கவிழ்ந்ததில் உதவி ஆய்வாளா் படுகாயம்

கோவில்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து மின்கம்பத்தில் மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:55 pm

DIN

கோவில்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து மின்கம்பத்தில் மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் படுகாயமடைந்தாா்.

கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அ.அந்தோணிதிலீப் (31). இவா் வில்லிசேரி பிரதான சாலையில் குற்றத் தடுப்பு பணிக்காக காரில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டாராம். அப்போது வேகமாகச் சென்ற இருச்சக்கர வாகனத்தை பிடிக்க, அதைப் பின்தொடா்ந்து காரில் சென்றாராம். முடுக்கலாங்குளம் - ஊத்துப்பட்டி பிரதான சாலையில் உள்ள மாடசாமி கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது காட்டுப் பன்றிகள் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திடீரென நிலைகுலைந்த காா், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியதாம். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உதவி ஆய்வாளரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கொப்பம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.