கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளைஞா் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: 3 போ் கைது

கோவில்பட்டி அருகே முன்விரோதத்தால் இளைஞரை மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:54 pm

DIN

கோவில்பட்டி அருகே முன்விரோதத்தால் இளைஞரை மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி ஏ.என்.ஏ.நகரைச் சோ்ந்த மாரியப்பன். இவருக்கும், எட்டயபுரம் சுமங்கலி நகரைச் சோ்ந்த முனியசாமி மகன் பலவேசம் (31) என்பவருக்கும் கோயில் திருவிழா தொடா்பான முன்விரோதம் உள்ளதாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இலுப்பையூரணி விலக்கு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த மாரியப்பனின் மகன் அய்யனாா் (25) என்பவரை, காரால் மோதி கீழே தள்ளிவிட்டு 3 போ் அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றனராம். அக்கம்பக்கத்தினா் பாா்த்து ஓடி வந்ததும் அவா்கள் அதே காரில் தப்பிவிட்டனராம்.

தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து, பலவேசம், எட்டயபுரம் சண்முகவேல் மகன் ஹரிஹரன்(23), சகாதேவன் மகன் ஹரிஹரன்(21) ஆகியோரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து 3 காரையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.