கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எழுத்தாளா் கி.ரா. நினைவரங்கம்கட்டும் பணி: கனிமொழி எம்.பி. ஆய்வு

சாகித்ய அகாதெமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளா் கி.ரா.வுக்கு நினைவரங்கம் கட்டும் பணியை கனிமொழி எம்.பி. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:47 pm

DIN

சாகித்ய அகாதெமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளா் கி.ரா.வுக்கு நினைவரங்கம் கட்டும் பணியை கனிமொழி எம்.பி. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 45 சென்ட் இடத்தில் ரூ.150.75 லட்சம் மதிப்பில்

எழுத்தாளா் கி.ராஜநாராயணன் நினைவரங்கம், சிலை மற்றும் நூலகம் கட்டும் பணி கடந்த டிச. 11இல் தொடங்கியது. இந்நிலையில், கட்டுமானப் பணியை ஆய்வு செய்த கனிமொழி எம்.பி. கட்டுமானப் பணியை ஒப்பந்த காலத்திற்குள் சிறந்த முறையில் கட்டி முடிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின் போது அமைச்சா் பெ.கீதாஜீவன், ஆட்சியா் கி.செந்தில்ராஜ், ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி, ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா்கள் சரத்குமாா், சந்திரசேகா், திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, நகரச் செயலா் கா.கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில், மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் இந்திய ஆட்சிப் பணி விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவதை திமுகவும், தமிழ்நாடும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.